வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
வாலிபரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா வாணியக்குடி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் கலைச்செல்வன் (வயது 24). சம்பவத்தன்று இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் மோட்டார்சைக்கிளில் சாத்தனூர் ரோட்டில் செங்குடி கண்மாய் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் நின்ற 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து கலைச்செல்வன் ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றியம் சிறுவாச்சி கிராமத்தை சேர்ந்த சுபேஸ் (21), ரஞ்சித் (20), அஜித்குமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.