சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;
பனைக்குளம்,
உச்சிப்புளி அருகே மேற்கு நாரை ஊரணி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.