சேலத்தில் கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது

சேலத்தில் கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-27 23:37 GMT

சூரமங்கலம்:

சேலம் சித்தனூர் அடுத்துள்ள சர்க்கார் கொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் பாஸ்கர் ராஜ் (வயது 25). டிப்ளமோ படித்துள்ள இவர், பட்டாசு கடையில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் பேசி பழகி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து நாளடைவில் பாஸ்கர் ராஜின் நடவடிக்கை சரி இல்லாததால் மாணவி, வாலிபருடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவியை வழிமறித்த பாஸ்கர் ராஜ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர் கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து அந்த மாணவி இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த பாஸ்கர் ராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்