கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது
கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தர்மபுரி:
தர்மபுரி கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், இவருக்கு பிரவீன்ராஜ் (வயது24), கோகுல்ராஜ் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர். பிரவீன்ராஜ் தர்மபுரி 4 ரோடு அருகில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கோகுல்ராஜ் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தடய அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று பிரவீன்ராஜ் கடைக்கு சென்றார். அப்போது முன்விரோதத்தில் பிரவீன்ராஜூக்கும், குமார் (54), பிரசாந்த் (32) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரவீன்ராஜ், தம்பி கோகுல்ராஜிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவர்கள், கோகுல்ராஜூவையும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அண்ணன், தம்பிகள் 2 பேரும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், பிரசாந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.