ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஆர்ப்பாட்டம்:தமிழகத்திற்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்பட 80 பேர் கைது

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் திடீரென தமிழகத்திற்குள் நுழைய முயன்றனர். இதுதொடர்பாக வாட்டாள் நாகராஜ் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-10-18 17:12 GMT

ஓசூர்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் திடீரென தமிழகத்திற்குள் நுழைய முயன்றனர். இதுதொடர்பாக வாட்டாள் நாகராஜ் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடகம், தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்றும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும், கன்னட சலுவளி கட்சி மற்றும் கர்நாடக ரக்ஷணவேதிகே, கன்னட ஜாக்ருதி வேதிகே ஆகிய கன்னட அமைப்புகளின் சார்பில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்கினார்.

இதில், கன்னட ஜாக்ருதி வேதிகே மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா, மற்றும் கே.ஆர்.குமார், சிவகுமார் கவுடா, கே.ஆர்.சரத் உள்ளிட்ட கன்னட சங்க பிரமுகர்கள் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென 'ஓசூரும் எங்கள் பூமி தான், எங்களுக்கு சொந்தமானது தான்' என்று கூறி தமிழகத்திற்குள் நுழைய முயன்றனர்.

80 பேர் கைது

அப்போது அவர்களை அத்திப்பள்ளி போலீசார் தடுத்து நிறுத்தி வாட்டாள் நாகராஜ் உள்பட 80 பேரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்