தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-15 19:30 GMT

மத்திகிரி:

மத்திகிரி அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பா. இவருடைய மனைவி சங்கரம்மா (வயது 38). இவர்களுடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சந்தோஷ் (22). கடந்த 14-ந் தேதி சங்கரம்மா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சந்தோஷ், சங்கரம்மாவின் வீட்டிற்கு சென்று அவருடைய மகன் எங்கே என கேட்டதாக தெரிகிறது. இதற்கு சங்கரம்மா பதில் அளித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், பாபு (30), கிரண்குமார் (22), பரத் (27) ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கரம்மாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சங்கரம்மா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சந்தோசை கைது செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்