டீக்கடையில் 90 கிலோ குட்கா பறிமுதல்

நாமக்கல்லில் டீக்கடையில் 90 கிலோ குட்காவை போலீசாா் பறிமுதல் செய்ததுடன் உரிமையாளரை கைது செய்தனர்.

Update: 2023-10-12 18:45 GMT

நாமக்கல் மஜித்தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் வெள்ளை நிற மூட்டைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், கடையில் சோதனை செய்தனர். அப்போது 6 சிறிய மூட்டைகளில் 90 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் என்.புதுப்பட்டி அருகே உள்ள ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்