மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் நேற்று மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீரியம்பட்டி அருகே குண்டுபள்ளம் சுடுகாட்டில் மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. அப்ேபாது போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரித்ததில் சரண்ராஜ் (வயது 29) என்பதும், அரசு மது பானங்களை பதுங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் அவரிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.