மகனுக்கு திருமணம் நடைபெறும் எனக்கூறி மோசடி: பரிகாரம் செய்வதாக தம்பதியிடம் நகை- பணத்தை சுருட்டியவர் கைது

மகனுக்கு திருமணம் நடைபெறும் எனக்கூறி பரிகாரம் செய்வதாக தம்பதியிடம் நகை- பணத்தை சுருட்டியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-21 21:21 GMT

மேச்சேரி:

ஜலகண்டாபுரம் அருகே காப்பரத்தாம்ப்பட்டி சேர்ந்த பழனிசாமி (வயது 70). இவரது வீட்டுக்கு வந்த நபர், மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார். பழனிசாமி, அவருடைய மனைவி செல்லம்மாள், மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரையும் பூஜையில் அமர வைத்துள்ளார். பின்னர் அவர்களது தலையில் ஒரு குச்சியை வைத்ததாக கூறப்படுகிறது. 3 பேரும் சிறிது நேரத்தில் சுய நினைவு இழந்தனர். உடனே அந்த நபர் பூஜையில் வைத்த நகை, பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் அரங்கூர் கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (22) என்பவர் பரிகாரம் செய்வதாக நகை, பணத்தை சுருட்டி சென்றது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்