தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

Update: 2023-09-17 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ரேஷன் அரிசி சிக்கியது

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

செம்மணஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கோட்டை வைரவள்ளியை சேர்ந்த முனியப்பன் (வயது 33) என்பது தெரியவந்தது.

கைது-பறிமுதல்

மேலும் அவர் ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்தியதும், அந்த பகுதியில் 620 கிலோ ரேஷன் அரிசி தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 1 டன் ரேஷன் அரிசி, ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர். இதில் தொடர்புடைய வேறு நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்