கிருஷ்ணகிரி மாவட்டத்தில்கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 10 பேர் கைதுசூதாடியதாக 19 பேர் பிடிபட்டனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, குட்கா விற்பனை செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல சூதாடியதாக 19 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-09-17 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, குட்கா விற்பனை செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல சூதாடியதாக 19 பேர் பிடிபட்டனர்.

கஞ்சா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படிஓசூர் சிப்காட் போலீசார் அனுமன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் அதேபகுதியை சேர்ந்த ரகுபிரசாத் (19) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அதே போல பர்கூர் அச்சமங்கலம் அருகே கஞ்சா விற்ற ராமமூர்த்தி (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை பகுதியில் லாட்டரி சீட்டுக்கள் விற்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல பேரிகை, ராயக்கோட்டை, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை பகுதியில் கடைகளில் பதுக்கி வைத்து குட்கா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

இதே போல கிருஷ்ணகிரி, ஓசூர், மத்திகிரி, பர்கூர், நாகரசம்பட்டி, சிங்காரப்பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்