பாலக்கோடு அருகேசூதாடிய 5 பேர் கைது

Update: 2023-09-11 19:30 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சித்திரைப்பட்டி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சித்திரைப்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுமாரியம்மன் கோவில் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான மணிவேல் (வயது 32), நாகராஜ் (36), வெங்கடேஷ் (50), குமார் (40) பாண்டியன் (50) என தெரிய வந்தது. இதையடுத்து பணம் வைத்து சூதாடியதாக அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுக்கள் மற்றும் ரூ.420 பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்