பாலக்கோடு:
பாலக்கோடு போலீசார் எலங்காளப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முருகன் (வயது49) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.