நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே ஜருகு சுடுகாடு மற்றும் கெட்டுப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக தொப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போலீசார் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜருகு கிராமத்தை சேர்ந்த துரை (வயது 53) என்பவர் ஜருகு சுடுகாட்டில் மது பதுக்கி விற்றது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கெட்டுப்பட்டி கிராமத்தில் வீட்டில் மது பதுக்கி விற்ற சவுந்தர்யா (40) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.