மத்தூர்:
மத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தொகரப்பள்ளி வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மொத்தம் 4 யூனிட் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் மண்ணை கடத்தியது பர்கூர் தொகரப்பள்ளியை சேர்ந்த பாலராமன் (வயது 52), தொகரப்பள்ளி மணி (75) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தொகரப்பள்ளியை சேர்ந்த பிரபு (31) என்பவரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 2 டிப்பர் லாரிகள், 4 யூனிட் மண் பறிமுதல் செய்யப்பட்டது.