மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள சிந்தல்பாடி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மகன் பிரபு (வயது 39). பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர். மேலும் இவர் 5 கறவை மாடு, ஒரு வெள்ளாட்டை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் முன்பு கறவை மாடுகளையும், ஒரு வெள்ளாட்டையும் கட்டினார். பின்னர் அதிகாலை எழுந்து பார்த்தபோது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளாட்டை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு இதுகுறித்து மொரப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அம்பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா மகன் சசிகுமார் (20), பழனி மகன் தமிழ் வளவன் (21) மற்றும் பெத்தூரை சேர்ந்த குமார் மகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆட்டை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தமிழ் வளவனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சசிகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.