தர்மபுரியில் வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறிபெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 6 பேர் கைது

Update: 2023-08-14 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 6 பேரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி

தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீசார் தர்மபுரி ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடை முன்பு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த சேலம், திருச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பெண்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கூலி வேலை செய்து வந்ததாகவும், நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக தினேஷ் (வயது 25) என்பவர் கூறியதால் இங்கு வந்ததாகவும் கூறினார்கள். இதுதொடர்பாக கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த தினேசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்களை அவர் விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது.

6 பேர் கைது

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ் கைது செய்தனர். இதேபோல் தர்மபுரி பகுதியில் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள 2 தங்கும் விடுதிகளில் தர்மபுரி டவுன் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதிகளில் அதிக சம்பளம் தருவதாக கூறி சில பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக விடுதி மேலாளர்கள் மணிவண்ணன் (43), கோபால் (32), உடந்தையாக செயல்பட்ட செந்தில் (40), சிலம்பரசன் (29), வீராசாமி (42) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்