அரூர் கோட்டத்தில் சாராயம், மது, கஞ்சா விற்ற 59 பேர் கைது

Update: 2023-08-08 19:30 GMT

அரூர்:

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில் போலீசார் அரூர் கோட்டத்திற்குட்பட்ட அரூர், பொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் சோதனை செய்தனர். அப்போது மது, சாராயம், கஞ்சா விற்ற 16 பெண்கள் உள்பட 59 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1,065 மதுபாட்டில்கள், 100 லிட்டர் ஊறல், 22 லிட்டர் சாராயம், 10 கிலோ கஞ்சா, 3 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்