இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது

Update: 2023-08-05 19:30 GMT

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போலீசார் போத்தாபுரம் ஜங்ஷன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பெருமாள் என்பவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு இளம்பெண் ஒருவரை வாலிபர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மல்லிகுட்டையை சேர்ந்த சசிகுமார் (வயது 25) என்பவரை கைது செய்தனர். பின்னர் இளம்பெண் மீட்கப்பட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்