குட்கா கடத்திய வாலிபர் கைது

Update: 2023-07-28 19:30 GMT

மத்திகிரி:

மத்திகிரி போலீசார் டி.வி.எஸ். சோதனை சாவடி அருகில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அந்த வழியாக ஸ்கூட்டரில் ஒருவர் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரிடம் 5 கிலோ 455 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதை கடத்தி வந்த ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த பாரத் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூருக்கு கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து குட்கா மற்றும் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்