மாரண்டஅள்ளியில்விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருட்டுவாலிபர் கைது

Update: 2023-07-22 19:30 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளியில் விவசாயி வீட்டில் ரூ.50 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இ.பி. காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். பின்னர் வேலை முடிந்த பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோலில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

வாலிபர் கைது

இதுகுறித்து மாரியப்பன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காந்திநகரை சேர்ந்த அஜித் (எ) குமரன் (27) என்பவர் மாரியப்பன் வீட்டில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்