விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 4 பேர் கைது

விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-13 19:30 GMT

சேலம்:

சேலம் அருகே மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 29). இவர், நேற்று முன்தினம் குகை பிரபாத் பகுதியில் உள்ள ஒரு காபி ஷாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர், அவரை விபசாரத்திற்கு அழைத்து உள்ளனர். இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் விஜய் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி குகை பகுதியில் ஒரு வீட்டில் சோதனையிட்டனர்.

அங்கு விபசார தொழிலில் ஈடுபட்ட சேலம் ஊத்துமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த சரவணன் (44), வின்சென்ட் பகுதியை சேர்ந்த பரிமளா (42), கருங்கல்பட்டியை சேர்ந்த சிவகாமி (50), ஏற்காடு மாரமங்கலத்தை சேர்ந்த மாரப்பன் (24) ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். பிறகு அவர்கள் சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்