நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் உத்தரவின்பேரில் கடந்த மாதம் 22-ந் தேதி திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் மொளசி அருகே உள்ள அம்மாசிபாளையம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டு இருந்த கொக்கராயன்பேட்டை அம்மாசிபாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் 400 லிட்டர் சாராய ஊறலும் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்ட சண்முகம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஏற்கனவே கள்ளச்சாராய வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் உமா, சாராயம் காய்ச்சி விற்பனை செய்த சண்முகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.