ஊத்தங்கரையில்மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை திருடியவர் கைது
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையை அடுத்த கொம்மம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஞானமூர்த்தி (வயது 45). விவசாயி. இவர் கடந்த மாதம் 1-ந் தேதி ஊத்தங்கரையில் உள்ள ஏ.டி.எம்.மில் 28 ஆயிரம் ரூபாயை எடுத்து அதனை தன்னுடைய மோட்டார் சைக்கிள் வைத்து விட்டு அருகே உள்ள கடைக்கு சென்று வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த பணம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்ட ஓசூர் அருகே கொத்த கொண்டப்பள்ளி நஞ்சாபுரத்தை சேர்ந்த மஞ்சுநாத் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.