ஆவின் பூத் ஊழியரை தாக்கியவர் கைது
ஓசூாில் ஆவின் பூத் ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;
ஓசூர்
ஓசூர் உழவர் சந்தை பகுதியில் ஆவின் பூத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் காளியப்பன். சம்பவத்தன்று குந்துமாரனப்பள்ளி அருகே உள்ள போத்தசந்திரத்தைச் சேர்ந்த லோகேஷ் (வயது40) என்பவர் ஆவின் பூத் முன்பு அமர்ந்து டீ விற்பனை செய்து கொண்டிருந்தார். இது குறித்து காளியப்பன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் காளியப்பனை தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசை கைது செய்தனர்.