தீபாவளியையொட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு

தீபாவளியையொட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-21 18:26 GMT

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் கடைவீதிகளுக்கு சென்று புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பட்டாசுகளை வாங்கி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் கரூரை பொறுத்தவரை ஜவகர்பஜார், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி உள்ளிட்ட கடைகளுக்கு பெருமளவில் மக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் ஜவகர்பஜார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலை சுற்றிதற்காலிக கடைகள், அமைக்கப்பட்டு துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு

இந்த கடைகளுக்கு அதிகளவிலான மக்கள் வருகைபுரிந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். ஜவகர்பஜார் கடைவீதியில் பொருட்களை வாங்க வருபவர்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அதிகளவில் வருவதாலும், கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே ஜவகர்பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுசம்பந்தமாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கரூர் ஜவகர்பஜார், மனோகரா கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்