தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-29 17:10 GMT


காங்கயத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஊதியூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக பிடிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலைய வளாகத்தில் நேற்று காலை 11 மணியளவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கயத்தை அடுத்த ஊதியூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக பிடிக்காததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

4 மாதங்களாக...

இதில் ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக சிறுத்தை ஒன்று சுற்றி வருகிறது. சிறுத்தை திடீரென விவசாயிகளின் நிலப்பகுதியில் புகுந்து மாடு, நாய்கள், ஆடுகள், கோழிகளை பிடித்து கொண்டு சென்று தின்று விடுகிறது.

இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாகவும், வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி சிறுத்தையை பிடிக்காததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்