தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில் விளக்கவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊரக வளர்ச்சித்துறையில் சாத்தியமற்ற இலக்குகளை திணித்தும், முறையான திட்டமிடல் இன்றி திட்டப்பணிகளை செயல்படுத்தும் அதிகாரிகளை கட்டுப்படுத்தக்கோரியும், கணினி உதவியாளர்களுக்கு வரன்முறை மற்றும் ஊதிய மாற்றமும் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ரமேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.