ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-30 21:33 GMT


தி.மு.க. ஆட்சியில் கடந்த 1½ ஆண்டுகளில் நடந்த மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட ஆர்.என்.புதூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சூரியம்பாளையம் பகுதி செயலாளர் கே.சி.பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் கலந்துகொண்டு பேசினார். இதில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் பெரியார்நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ், கோவிந்தராஜ், கேசவமூர்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், கங்காபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொங்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்