ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- வெளிநடப்பு

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- வெளிநடப்பு

Update: 2022-12-21 21:59 GMT

நம்பியூர்

பணி நெருக்கடிகளை குறைக்க வேண்டும். விடுமுறை தின ஆய்வுகளை நடத்தக்கூடாது. காலம் கடந்த ஆய்வுகள், கணக்கற்ற ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் இறப்புக்கு காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பு போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் வட்டார தலைவர் அருண் டானியல் தலைமை தாங்கினார்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு போராட்டமும் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்