டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-20 17:47 GMT


காங்கயம்-கரூர் சாலையில் பகவதிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு நேற்று காலை தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு. டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கயம் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் (சி.ஐ.டி.யு) சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்ட்ததில் தமிழகம் முழுவதும் உள்ள 43 டாஸ்மாக் கிடங்கில் 2 ஆயிரத்து 500-க்கும் மேல் சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்றைக்கு இருக்க கூடிய விலைவாசிக்கு ஏற்ப மதுபான உற்பத்தியாளர்கள் சங்கமே உடனடியாக கூலி உயர்வு வழங்க வேண்டும்.

டாஸ்மாக் நிர்வாகமே டாஸ்மாக்கில் சுமைப்பணி வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ.,, இ.பி.எப். பணத்தை ஒப்பந்ததாரரிடம் முறையாக செலுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் ஏற்றுக்கூலி என்பது ஒரே மாறியாக நிர்ணயம் செய்ய வேண்டும், டாஸ்மாக்கில் சுமைப்பணி வேலை செய்யும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் (சி.ஐ.டி.யு) சங்கத்தின் நிர்வாகிகள், சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்