தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-08-16 17:42 GMT


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சாதி அடிப்படையில் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் சுமன்சிங் தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மாசிலாமணி, தெற்கு மாவட்ட தலைவர் பாக்கியராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயம் செந்தில், வடக்கு மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார், தாராபுரம் வடக்கு செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்