தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதாவினரையும், அதற்கு போராடிய மக்களின் வீடுகளை இடித்த உத்தரபிரதேச அரசையும், போராடியவர்களை சுட்டுக்கொன்ற ஜார்க்கண்ட் அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் பாரூக் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் அப்துல் ரகுமான், துணை தலைவர் ஜாகீர் அப்பாஸ், துணை செயலாளர்கள் காஜா, அப்துல் ரசீது, நூர்தீன், ரபீக் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா நன்றி கூறினார்.