ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-24 21:59 GMT

ஈரோடு

ரெயில்வே ஊழியர்கள் மீது அதிகாரிகள் காட்டும் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய ரெயில்வே ஓடும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் என்ஜின் டிரைவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் ரெயில்வே என்ஜின் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு கிளை செயலாளா் ரதீஸ் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர்கள் பிரகாஷ், ரியாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் என்ஜின் டிரைவர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்