ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா
ராணிப்பேட்டையில் ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டையில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை அடுத்து 9 நாட்கள் தவ நாட்களாக அனுசரிக்கப்பட்டு, நாள்தோறும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஆண்டு திருவிழா, பங்குத்தந்தை லியோ மரியம் ஜோசப் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் அருட் தந்தை எம்.ஐ.ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பலியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறுவர்களுக்கு பொது நன்மைகள் வழங்கப்பட்டன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.