பெண்ணை ஏமாற்றிய ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

பெண்ணை ஏமாற்றிய ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-13 18:45 GMT

மானாமதுரை, 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரும்பச்சேரியை சேர்ந்தவர் ராஜா(வயது 27). இவர் சிவகங்கை ஆயுதப்படை காவலராக உள்ளார். இந்நிலையில் ராஜா, 29 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டுமென, மதுரை கோர்ட்டில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி, சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தரியனை விசாரணை அதிகாரியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நியமித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி ராஜாவை நேற்று கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்