சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு

சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2022-06-21 12:51 GMT

மடத்துக்குளம்

மடத்துக்குளம் பகுதி அமராவதி ஆற்றங்கரையில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. இதில் கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் பிரதானமாகும். மிகப்பிரமாண்டமான அமைப்பில் சுற்று மதில் சுவர், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், முன்மண்டபம், சிறந்த கட்டடக்கலை அமைப்புடன் கூடிய கோபுரம், கற்றளி முறையில் அமைக்கப்பட்ட கோவிலாக இது உள்ளது. இங்கு சிவனுக்கு உகந்த நாள் மற்றும் சிவராத்திரி, பிரதோஷம், உள்ளிட்ட நாட்களிலும் சிறப்பு நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடப்பது வழக்கம். ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி கருவறைக்குள் விழுந்து லிங்கத்தின் மீது படர்ந்து ஒளி வீசுவது இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்று. இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த கோவிலை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற அரசு இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமனம் செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரிகள் உமா சங்கர் மற்றும் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்