அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவளம் கிராமத்தில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவளம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.
இதில் 15 நாட்களாக மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாடக கலைஞர்கள் அர்ஜுனன் வேடம் அணிந்து கொண்டு பாடல்களைப் பாடிக் கொண்டு உயரமான மரத்தில் ஏறி தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.