வரதராஜ பெருமாள் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி

வேகாமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-04-23 18:21 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே வேகாமங்கலம் கிராமத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் புண்ணியாவாசனம், மிருச்சங்கிரஹணம், கலசபூஜைகள், ஹோமங்கள், மஹாசாந்தி, திருமஞ்சனம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை விஸ்வரூபம், கலச நீர் கோவிலின் மீது எடுத்து சென்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கட்டைக்கூத்து கலைஞர்களால் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அர்ஜுனன் வேடமிட்ட கட்டைக்கூத்து கலைஞர் பாடல்கள் பாடியவாறு தபசு மரத்தின் உச்சியில் அமர்ந்து பூஜை செய்யப்பட்ட பழங்கள், குங்குமம், திருநீறு உள்ளிட்டவைகளை பக்தர்களை நோக்கி வீசினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்