அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
திருவண்ணாமலையில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 7-ந் தேதி நடக்கிறது.
திருவண்ணாமலையில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணியவில் இருந்து பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைய உள்ளது.
போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நாளை போட்டி தொடங்கும் வரை சுய விவரம் மற்றும் பிற விவரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்தும், 17 வயது முதல் 25 வயதிக்கு உட்பட்ட ஆண்களுக்கு காஞ்சி சாலையில் இடிஞ்ச மண்டபம் அருகில் இருந்தும், 25 வயதிக்கு மேற்பட்ட மற்றும் 17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் இருந்தும் தொடங்கி மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் தகுதி சான்றிதழ்களும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.1000 மற்றும் தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.