தூத்துக்குடியில் மதுகுடிக்கும் போது தகராறு:வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து
தூத்துக்குடியில் மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.
தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் அரிச்சந்திரன் (வது 25). பிராய்லர் கடை ஊழியர். இவர் சம்பவத்தன்று நண்பரான ராஜகோபால்நகரை சேர்ந்த அய்யாகுட்டி மகன் சின்னராசு (24) மற்றும் சிலருடன் சேர்ந்து தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியில் மது குடித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அரிச்சந்திரனுக்கும், சின்னராசுக்கும் இடையே திடீரென்று வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னராசு பீர் பாட்டிலை உடைத்து அரிச்சந்திரனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த அரிச்சந்திரன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னராசுவை தேடிவருகின்றனர்.