மது அருந்தும் போது ஆம்லெட்டை யார் சாப்பிடுவது என்பதில் தகராறு - மைத்துனரை அடித்துக் கொன்ற மாமா..!

கல்பாக்கம் அருகே, மதுபோதையில் ஆம்லெட்டுக்காக மைத்துனரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-08-04 21:04 IST

திருவள்ளூர்,

கல்பாக்கம் அடுத்த உய்யாலிகுப்பம் இருளர் பகுதியை சேர்ந்த செல்லப்பன் (வயது 30) மற்றும் அவரது மாமா முருகன் (வயது 32) ஆகிய இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், ஆம்லெட்டை யார் சாப்பிடுவது என்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முருகன், செல்லப்பனை கட்டையால் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலின் பேரில் வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்த முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்