நாய் குரைத்ததால் தகராறு: கார் டிரைவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-21 19:56 GMT

திருச்சி சிந்தாமணி பஜார் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33), கார் டிரைவர். இவரது வீட்டின் அருகே வசிக்கும் ரகுநாதன் (42) என்பவர் நாயை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நாய் குரைத்தது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ரகுநாதன் மற்றும் மேல சிந்தாமணியை சேர்ந்த சுரேந்தர் (22), மண்ணச்சநல்லூரை சேர்ந்த தினேஷ்குமார் (22), சங்கரன்பிள்ளை ரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் (22) ஆகியோர் சேர்ந்து சக்திவேலை தகாத வார்த்தைகளால் திட்டி, டியூப் லைட்டால் அடித்து கீழே தள்ளிவிட்டு கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்