குன்னத்தூர்-ஊத்துக்குளி ரோட்டில் கட்டிட மூலப்பொருள் கடை வைத்திருப்பவர் விஸ்வநாதன். இவருடைய கடைக்கு கடந்த வாரம் பெரியாயி பாளையத்தை சேர்ந்த பாபு (வயது 57), வாசு (33) ஆகியோர் சென்று 30 மூட்டை சிமெண்டு வாங்கி உள்ளனர். இதற்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி குன்னத்தூர் போலீசில் விஸ்வநாதன் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வாசுவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.