பட்டாக்கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது

Update: 2023-08-09 16:32 GMT


திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம் நால்ரோடு பகுதியில் சிலர் பட்டாகத்துடன் சுற்றி தருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரபாண்டி சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டார். அப்ேபாது அய்யம்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரித்தார். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவருடைய மோட்டார் சைக்கிளில் தகர்த்தியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் பட்டுக்கோட்டை நகர், தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் ஹரிஹர சுதன் (வயது 20) என்பதும்,. இவர் அப்பகுதியில் பட்டக் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததும் விசாரணை தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்