திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா (வயது 40), தணிகைவேலன் (30) என்பது தெரிய வந்தது. மேலும் அந்த 2 பேரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 ½ கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.