கோவில்பட்டி பகுதியில் மின் தடை ஏற்படும் பகுதிகள்

கோவில்பட்டி பகுதியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-06-16 11:21 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மின்வாரிய கோட்ட பகுதியில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகளை செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பழுதடைந்த மின்கம்பங்களை...

கோவில்பட்டியை மின்வாரிய கோட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) சாய்ந்த மின்கம்பங்கள் நிமிர்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உபமின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் நடராஜபுரம், புதுக்கிராமம், லாயல் மில் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, வள்ளுவர் நகர், கடலையூர் ரோடு, முகமது சாலிகாபுரம், ஆகிய பகுதிகளுக்கும், விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் ஈராட்சி, செமப்புதூர் பகுதிக்கும், எட்டயபுரம் உப மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் குமரெட்டியாபுரம், நாவிலக்கம்பட்டி பகுதிக்கும் மின்தடை ஏற்படும்.

கரடிகுளம் பகுதி

மேலும், கழுகுமலை உப மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் வெள்ளப்பனேரி மின் தொடர் சி.ஆர். காலணி மற்றும் கரடிகுளம் பகுதிக்கும், செட்டிகுறிச்சி உப மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கட்டாரங்குளம், செட்டிகுறிச்சி, சிதம்பரம் பட்டி, ஆவுடையம்மாள்புரம், புதுப்பட்டி, சரவணா புரம், கீழே நாலந்துலா, மேல நாலாந்துலா பகுதிக்கும், கடம்பூர் உப மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கீழமங்கலம் தொடரில் ஒட்டுடன் பட்டி, தங்கம்மாள்புரம், குப்பனாபுரம் ஆகிய பகுதிக்கும், பசுவந்தனை உப மின் நிலையத்தில் வடக்கு வண்டானம், குமராபுரம், தெற்கு வண்டானம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சனிக்கிழமை

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம். துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உப- மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

மேற்கண்ட உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு நாளை மேற்படி நேரங்களில் மின்சாரம் கிடைக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்