நகர்ப்புற வார்டு குழு பகுதி சபா கூட்டம்

அரூர் பேரூராட்சியில் நகர்ப்புற வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-15 19:06 GMT

அரூர்

அரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நகர்புற வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் சூர்யா தனபால், செயல் அலுவலர் விஜய்சங்கர், நகர செயலாளர் முல்லை ரவி, செயலாளர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இந்த சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. அப்போது பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்