'நீங்கள் நலமா' திட்டம்: பயனாளிகளிடம் நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ கால் மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.

Update: 2024-07-04 10:22 GMT

சென்னை,

அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ கால் மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசி கருத்துகளை கேட்டறிந்தார்.

அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா, எந்த தேதியில் பணம் வருகிறது, எவ்வளவு தொகை வருகிறது, எந்த வகையாக வந்தடைகிறது, ஏதேனும் குறை உள்ளதா, அலுவலகத்தில் அதிகாரிகள் நன்றாக நடத்துகொள்கிறார்களா? என்ற விவரங்களை பயனாளிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்