பயனின்றி கிடக்கும் கழிப்பறைகள் பராமரிக்கப்படுமா?

குன்னூர் அருகே பயனின்றி கிடக்கும் கழிப்பறைகள் பராமரிக்கப்படுமா? என்று தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-12-29 18:45 GMT

குன்னூர்

குன்னூர் அருகே பயனின்றி கிடக்கும் கழிப்பறைகள் பராமரிக்கப்படுமா? என்று தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

டேன்டீ குடியிருப்பு

குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகாசூரன் மலைப்பகுதியில் டேன்டீ குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 60 தோட்ட தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சேர்த்து, அங்கு 3 கழிப்பறைகள் மட்டுமே தொடர்ச்சியாக கட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதுவும் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் கழிப்பறை கட்டிடம் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

புதிய கழிப்பறைகள்

இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் ஒரே இடத்தில் 3 கழிப்பறைகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டி தரப்பட்டது. தற்போது அவை பயன்பாடு இன்றி கிடக்கிறது. இதனால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகிறோம். அப்போது வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. குறிப்பாக பெண்களின் சிரமம் சொல்லி மாளாது.

இதுகுறித்து பலமுறை டேன்டீ நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த கழிப்பறைகளை சீரமைக்கவோ அல்லது புதிய கழிப்பறைகள் கட்டி தரவோ மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்